Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 SEP 1966
இறப்பு 07 APR 2023
அமரர் கிருஸ்ணகோபால் புஸ்பலதா
வயது 56
அமரர் கிருஸ்ணகோபால் புஸ்பலதா 1966 - 2023 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் கிருஸ்ணகோபால் புஸ்பலதா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-03-2024

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!

என் மனதோடு போராடும்
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான்
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது

ஓராண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !

கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
     இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்