Clicky

கண்ணீர் அஞ்சலி
அன்னை மடியில் 20 MAR 1974
இறைவன் அடியில் 03 FEB 2025
திரு கோகுலன் சண்முகம் (கோபி)
வயது 50
திரு கோகுலன் சண்முகம் 1974 - 2025 கட்டுடை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோகுலன் சண்முகம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

கடவுளுக்கு கண் இல்லை
என்று கேள்வி பட்டுள்ளேன்
இப்போது புரிகின்றது அவனுக்கு
மனதும் கிடையாதென்று...

நல்லவர்கள் கூடும் போது நன்மைகளும் கூடும்
சொர்க்கம், நரகம் என்றெல்லாம் சொல்கிறார்களே
நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் அண்ணா..?
ஊருக்கே நல்லவராயிற்றே நீங்கள் எப்படி
நரகத்தில் இருப்பீர்கள் அண்ணா..!?

எத்தனை மருந்திட்டாலும் எதையும்
மறக்க முடியவில்லை அண்ணா..

வாழ்க்கையில் இத்தனை மணிப் பொழுதுகள்
எதற்காகவும் என் கண்ணீர்த் துளிகள்
கரைந்ததாய் எனக்கு ஞாபகம் இல்லை..

எப்படியும் உங்களைக் காப்பாற்ற
முடியும் என்ற நம்பிக்கையில்,
கடவுளை மட்டும் நம்பி எங்கள்
கூட்டு பிரார்த்தனைகளை செய்தோம்.
இருந்தும் உங்களை கைவிட கடவுள் விரும்பவில்லை ...

துன்பப்பட்டவர்களுக்குத் துணையானாய்
துயரப்பட்டவர்களுக்குத் தோளானாய்
பசித்த உயிர்களுக்குத் தாயானாய்
இனி அவர்கள் எங்குச் செல்வார்கள்?
உதவிகள் பல செய்து மிக பெரிய வள்ளலானாய்..

இருந்தாலும் ஆயிரம் பொன்
இறந்தாலும் ஆயிரம் பொன்
என்ற பழமொழிக்கு அமைய
இறந்தும் உடல் உறுப்புகளை தானம் செய்து பல
உயிர்களை வாழ வைத்துள்ளீர்கள் அண்ணா...

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்
நேற்று வரைக்கும் மனிதனப்பா
இன்று முதல் நீ புனிதனப்பா....

என்றும் உங்கள் நினைவுடன்
குமரகுருதாசன் குடும்பம் - இலங்கை

தகவல்: கவி(சகோதரர் -இலங்கை)

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices