வலி நீங்க நீள் துயில் கொள் நந்தினி… கலாபவனத்தில் கண்டநாள் முதல் இன்று வரை மலர்ந்த முகத்துடனும் மாறாச்சிரிப்புடனும் அன்புள்ளத்துடன் நட்புடன் பழகிய நம் நந்தினியின் பிரிவு எம்மை நிலைகுலைய வைத்தாலும்…… நந்தினி நீ வாழ்ந்தாய் பாரினில் பலர் மெச்ச அன்பென்னும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து பண்புடை மக்களைப் பாசமுடன் வளர்த்து உற்றார், உறவினர் உன் பலமெனவே வாழ்ந்து நல்லாசிரியையாய் தந்தை வழி நின்று கலைச் சேவை செய்து நட்பை , பெரியோரை மதித்து ஒரு பண்பாளியாக பூலோகத்தில் எடுத்த மானிடப்பிறப்பிற்கு இலக்கணமாகி நின்றாய் நந்தினி இப்போ நீ மனதில் உரத்துடன் நோய் அரக்கனுடன் எதிர்த்துப் போராடிப் போராடி களைத்திருப்பாயம்மா… ஆகவே நீ வலி நீங்க நீள் துயில் கொள். செல்வி சுரேஷ்