யாழ். அச்சுவேலி பத்தமேனி வைரவர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் வாழ்வில் ஒளி விளக்காய்
எங்களுக்கு வழிகாட்டிய
எங்கள் அப்பவே!
ஆண்டுகள் இருபது சென்றாலும்
தாங்காத வலிகளோடும்
தூங்காத விழிகளுடனும்
வற்றாத கண்ணீருடனும்
பிரிந்து தவிக்கின்றோம் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
இலக்கணமானவரே!
அன்பால் எம்மை தாங்கியவரே!
எங்களை தவிக்க விட்டு எங்கு சென்றீர்கள்?
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
அருகில் இருந்தாலும்
எங்கள் அப்பாவுக்கு நிகராகுமோ?
உங்களை நினைக்கும் போதெல்லாம்
ஆறுதல் சொல்லவருவது கண்ணீர் மட்டும்தான்
அப்பப்பா தாத்தா என்று உங்கள் படத்தைப்பார்த்து
உங்கள் பேரப்பிள்ளைகள் அழைக்கின்றனர்
மீண்டும் வருவீரோ அப்பா!!!
உமது பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.