

யாழ். நாரந்தனை வடக்கு றோட்டைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை தையிட்டிப்புலத்தை வசிப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு முத்தட்டு மட வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாதேவி செல்வரட்ணம் அவர்கள் 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜந்தன்(சுவிஸ்), ஜசிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நித்தியானந்தசிவம், சிறிநாதன், காலஞ்சென்றவர்களான தபான், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபினா(சுவிஸ்), பிரதீப்(ஜென்றல் எலற்ரிக்) ஆகியோரின் அன்பு மாமியும்,
லலிதாதேவி, காலஞ்சென்ற நடராசா மற்றும் மகேஸ்வரி, காசிநாதன், காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மீரா, ஆதிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.