Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 10 MAY 1969
இறப்பு 13 JAN 2023
அமரர் கிருபாகரன் நாகரத்தினம்
வயது 53
அமரர் கிருபாகரன் நாகரத்தினம் 1969 - 2023 உருத்திரபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருபாகரன் நாகரத்தினம்அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி:02/01/2024.

அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்... பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...!

 இதயத்தில் இரக்கம் கொண்டவனே
 எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
 புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
 உள்ளத்தில் பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும் காலம் வருமுன்னே
 கண்மூடி மறைவாய் என்று கனவிலும் நினைக்கவில்லை
 எமைவிட்டு பிரிந்ததேனோ?
எம் மனம் பரிதவிக்குதையா எப்போ இனி உமை காண்போம்.
 உடல்கள் உயிரை பிரிந்தாலும்
 உணர்வுடன் ஒன்றாகிப்போன உங்கள் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!

ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!

தூணாக காலமெல்லாம்
காத்திடுவாய் என இருந்தோம்
காலன் அழைத்தவுடன்
கறைந்ததேனோ காற்றோடு?

வானம் விரிந்திங்கு
வண்ண மழை தூவினாலும்
காணும் உறவெல்லாம்
கைகொடுத்து உதவினாலும்

அப்பா உங்கள் உறவு
இப்போதில்லை என்ற உணர்வு
அனலாய் எறிக்குதப்பா
அகிலமே வெறுக்குதப்பா!

நீங்கள் பூவுலகை விட்டு மறைந்த போதும்
உங்களது ஆத்ம வழிகாட்டலிலும்
உங்களது நினைவுகளுடனும்
எமது வாழ்க்கை பயணம் தொடரும் அப்பா..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 13 Jan, 2023
நன்றி நவிலல் Sun, 12 Feb, 2023