Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 JUN 1926
இறப்பு 21 OCT 2012
அமரர் கிருத்தோ சவிரிமுத்து
மெலிஞ்சுமுனை கலைஞானச்சுடர், மிருதங்க ஆசான்
வயது 86
அமரர் கிருத்தோ சவிரிமுத்து 1926 - 2012 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். மெலிஞ்சமுனை ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருத்தோ சவிரிமுத்து அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உம்மைப் பறிந்து பதின்நான்கு
 ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
 கழிந்து போனதே 
தாத்தா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ தாத்தா?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

பேரப்பிள்ளைகளுடன் அன்புடன் இருந்தீர்களே ....
அந்தக் காலங்களை நாங்கள் இன்னும் மறக்கவில்லை தாத்தா....

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மரியதாஸ் ஆனந்தன்(பேரன்)

தொடர்புகளுக்கு

மரியதாஸ் ஆனந்தன் - பேரன்

Photos

Notices