யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன், குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிரிதா பாலசுந்தரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: அட்டமி(12-11-2025)
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளி விளக்கே
வாழ்விற்கு வழிகாட்டியாய் எம்மை வாழ வைத்த- அம்மாவே
அன்பிற்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீர்களே!
அன்று அத்தனை வலிதந்து சென்ற
உங்களின் இழப்பிற்கு இன்றோடு ஓராண்டு - அம்மா
ஒரு நொடிகூட நம்பமுடியவில்லை மருத்துவத்திற்காக- சென்ற நீங்கள்
மண்விட்டு மறையும் காலம் வெகு விரைவில் வருமென
மனதளவிலும் எண்ணவில்லை
மனமாறாத் துயரோடு விழியோடு நீர் சொரிய
வழி கடந்து செல்கின்றோம் உங்கள் நினைவுகளோடு...
எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஓராண்டு ஆனதம்மா!
பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது...!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
அடிமுடி அறியமுடியா அற்புதமே!
தாலாட்டி சோறூட்டி வளர்த்த சொற்பதமே!
தினம் தொழுகின்றோம் உன் பொற்பாதமே!
உங்கள் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Rest in peace very sad news