
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Haag ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கேதாரலிங்கம் தேவராணி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமக்கு உயிர் கொடுத்து உளம் புதைத்து
வளம் பெருக்கி வாழ்வு காட்டி
சிரித்த முகத்தோடு சினக்காத விழியோடும்
அன்பின் இருப்பை ஆளுமையுடன் வாழ்ந்துகாட்டிய
அருமைத் தெய்வம் எங்கள் அம்மா!!
அம்மாவை இழந்து ஆண்டுகள்
பதினொன்று ஆனதுவே...
அரவணைத்து அன்பு காட்டிய இதம்
என்றும் எம் இதயத்திலும் உடலிலும்
உணர்வாகக் கலந்து நிற்குதம்மா...
தெய்வத்துள் கலந்துவிட்ட எம் குடிகாக்கும்
தெய்வம் அம்மா!!
அப்பப்போ தேம்பும் மனதை உங்கள் நினைவுகளால்
ஆறுதல் படுத்துகிறோம்!!
எம் குடும்பத்தில் நல்நிகழ்வுகள் நடைபெறும்
நேரமெல்லாம் அருகிருந்து வாழ்த்துவதாய்
அனைவரும் உணர்கிறோம் அம்மா!
என்றும் உறுதுணையாய் நீங்கள் நிற்க
உளமுருகி வேண்டி நிற்கும்
குடும்பத்தினர்.
உங்கள் பிரிவால் வாடும்:
கேதாரலிங்கம் சுப்பையா -கணவர்
டிலூஷியா சுப்பையா -மகள்
கஜேந்திரா சுப்பையா -மகன்.
ரெங்கநாத் சுப்பையா -மகன்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details