யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம், கிளிநொச்சி பரந்தன் குமரபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேசகர் கனகசபை அவர்களின் நன்றி நவிலலும்.
அன்புநிறைந்த கணவனாய்
பாசமுள்ள தந்தையாய்
பண்புள்ள மாமனாய்
பரிவுள்ள பேரனாய்
உரிமையுள்ள உடன்பிறப்பாய்
மதிப்பான மைத்துனராய்
மாண்புள்ள சகலனாய்
உற்றவாய் உறவினராய்
இற்றைவரை வாழ்ந்திருந்து
இறையடி சேர்ந்த
எங்கள் தெய்வத்தின்
மங்காத திருவடிகளுக்கு
இம்மலரினை சமர்ப்பணமாக்கி
கும்பிட்டு பணிகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.