45ம் நாள் நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 NOV 1988
ஆண்டவன் அடியில் 12 DEC 2021
திருமதி கீர்த்திகா நரேஸ்ராஜ் 1988 - 2021 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா திருநாவற்குளம் சிவன்கோயில் வீதி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கீர்த்திகா நரேஸ்ராஜ் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

நாங்கள் பார்த்திருக்கவே
சித்திரம் ஒன்று சிதைந்து போனதுவே!
நாங்கள் விழித்திருக்க கோலமொன்று
கலைந்து போனதுவே
எங்களின் கண்முன்னாலேயே
வண்ணப்பூவொன்று
மண்ணில் மறைந்ததுவே!
ன்ன செய்வோம் ஏது செய்வோம்
நிம்மதியில்லை எமக்கு...

நீங்கள் எம்மை விட்டு விலகி வெகுதூரம்
சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுகளை
எமதுயிரே நெஞ்சிருத்தி
அர்ப்பணிக்கின்றோம்
எம் அஞ்சலிகளைக் கண்ணீர்த் துளிகளாக
தங்களின் பாதங்களின் சந்நிதியில்...

உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று
எல்லாம் வல்ல பரம்பொருளின்
பாதாரவிந்தங்களை சென்றடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 179/285 சிவன் கோயில் வீதி,
திருநாவற்குளம், வவுனியா.

தகவல்: பரமநாதன் நரேஸ்ராஜ் (கணவர்)

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்