Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 12 AUG 1943
இறப்பு 09 JAN 2021
அமரர் கதிர்காமு வைரவநாதர் (சந்திரா)
வயது 77
அமரர் கதிர்காமு வைரவநாதர் 1943 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தென்மராட்சி மந்துவில் கிழக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு வைரவநாதர் அவர்களின்  அந்தியேட்டி சபீண்டீகரண அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட கதிர்காமு வைரவநாதர் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 06-02-2021 சனிக்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய கிரியை 08-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.