யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரான்ஸ் Chelles ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இருக்கும் போது
கற்றுக் கொண்டதை விட
இல்லாத போது அதிகமாகவே
கற்றுக் கொண்டோம்
எத்தனை உறவுகள்
எம் அருகிலிருந்தாலும்
எம் அப்பாவின் வெற்றிடத்தை
யாராலும் ஈடுசெய்யமுடியாது
நீங்கள் துன்பத்தில் கட்டிலில்
துயில் கொள்ளும் போது கூட
உங்கள் கண்களில் தைரியத்தையே கண்டோம்
தன்நம்பிக்கை ஊட்டும்
நம்பிகை அப்பா நீங்கள்
தடைகளைத் தகர்க்கும்
தைரியசாலி என்றுமே
தலைகனமில்லா எங்கள் அப்பா
எத்துயர் வந்து போதும் கலங்காத உள்ளம்
உங்கள் ஓற்றைப் பார்வையில்
ஓராயிரம் அர்த்தம் சொல்லும்
உத்தமர் அப்பா நீங்கள்
நாம் சோர்ந்து கலங்கும் போதெல்லாம்
கையோடு கைபிடித்து வெற்றியை தந்தீர்கள்
கஷ்டங்கள் பல உங்கள் மனதிலிருந்தாலும்
எங்கள் இஷ்டங்களுக்கு என்றும்
தடை போட்டதில்லை நீங்கள்
எங்களுக்கு எப்போதுமே நல்வழிகாட்டி
ஆசானாய் அறிவுரை தந்தீர்கள்...
எத்தவம் முற்பிறப்பில் நாம் செய்தோமோ...
நீங்கள் எங்கள் அப்பாவாக அவதரிக்க
இனிமேலும் எத்தனை பிறவியெடுத்தாலும்
நீங்கள் எங்கள் அப்பாவாக
வரவேண்டுமென்று
நாம் வரம் வேண்டுவோம் இறைவனிடம்
ஏனெனில் நாங்கள் தேடும் ஓரே உறவு
நீங்கள் மட்டும் தான் அப்பா
எங்களுக்கு நீங்கள் உறவு இல்லை
எங்கள் உயிரே நீங்கள் தான் அப்பா!!!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி,
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.
REST IN PEACE APPAPPA I LOVE YOU.