Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 APR 1933
இறப்பு 27 JAN 2020
அமரர் கதிர்காமு சின்னையா
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
வயது 86
அமரர் கதிர்காமு சின்னையா 1933 - 2020 புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமு சின்னையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா ஆழ்ந்த அன்பு....... !!

கடிந்து பேசாத கனிவு, கவலை மறக்கச் செய்யும் பரிவு,
கண்ணின் இமை போன்ற காவல்,
வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத வாஞ்சை......!!

வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!

அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!

ஆம் அகிலமிதில் எல்லோருக்கும்
அமைவதில்லை இந்த உறவு
அருமையாக குறையேதுமில்லா
எம் மகிழ் வாழ்விற்கு குறை கூற
இயலா உந்தன் உழைப்பே விதை....!

கட்டாயம் காலம் உள்ளவரை
கடவுளுக்கு நன்றி சொல்வேன்..
கடுகளவும் குறையேதுமில்லா உனை
தந்தையாய் தந்ததற்கு... !!!!!  

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...     



தகவல்: குடும்பத்தினர்