திதி:22/03/2024
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமன் நாகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது
எங்கே அம்மா!!!
கல்வியைக் காலத்திற்கேற்றவாறு கற்பித்து
அலைகடல் கடந்தும் மலைபோல வாழ்வு சிறக்க
நிலைகுன்றாது நிழலாக எமக்கிருந்த தாயே
சிலையாக மனதினில உருமாறியது ஏனம்மா...
எம் உள்ளத்தின் இருக்கும் தெய்வம்
நீ அம்மா எத்தனை ஆண்டுகள்
சென்றாலும், உன் பாசத்திற்கு
நாம் பட்ட கடன் தீராதம்மா!
உந்தன் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் உயிர் உள்ள வரை வாழுமம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!