10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிர்காமு நடராசா
ஓய்வுபெற்ற மருந்துக் கலவையாளர்- நட்டாங்கண்டல்
வயது 75
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாய் வெள்ளிரு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓயார் சின்னக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு நடராசா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை
பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?
காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!
இன்றுடன் 10 ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Ohh Mr Nadarasa. I was shocked to see this message. It's unbelievable that you left us eight years ago. I never forget your hard and honest work. May your soul peace in rest.