Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 FEB 1945
இறப்பு 04 JUN 2019
அமரர் கதிர்காமதம்பி சிவபுண்ணியம் (தேவு)
வயது 74
அமரர் கதிர்காமதம்பி சிவபுண்ணியம் 1945 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமதம்பி சிவபுண்ணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஐந்து ஆண்டுகள் மறைந்தாலும்
ஆறவில்லை எங்கள் துயரம்
ஆறாத்துயரில் எங்களை ஆழ்த்தி விட்டு
மீளாத் துயில் கொண்டீர்களே!

இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே!

வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ...

ஆண்டுகள் ஐந்தென்ன ஐந்து யுகம் கடந்தாலும்
அழியாத உங்கள் நினைவுகள் எம்மிலே வாழும்
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் கடந்தாலும்
உங்கள் காலடித்தடங்களில் நாம் தொடருவோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்