யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சாம்பசிவம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், மலர்அஞ்சலி, பிரசுரங்கள் மற்றும் RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியை 26-01-2023 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
வீட்டு முகவரி:
103, காரைநகர் வீதி,
கொட்டடி, யாழ்ப்பாணம்.
Condolences to my cousin Devi.