யாழ். வயாவிளான் பலாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கியா அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு ரவிநாதன் அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம், இரத்தினேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிறேமளா சாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அட்சிகா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வமலர், கோபாலகிருஷ்ணன், சரஸ்வதி, யோகேஸ்வரி மற்றும் பாலசுப்ரமணியம்(பிரான்ஸ்), கந்தசாமி(விஜயன்- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபாலன், யோகேஸ்வரன், ரவி, எலிசபெத்ராணி, தேவராணி, சின்னத்தங்கம், ஆனந்தகுமார், சாந்தகுமார்(அவுஸ்திரேலியா), காயத்திரி, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 3:30 மணி முதல் பி.ப 5:30 மணியளவில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அவசர கால நிலைமையை கருத்தில் கொண்டு அரச அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு ஏற்ப நடைபெறும்.
My soul is sad and my heart is painful, sitappa you left so early, I still can't believe that you left us but I know that you are in our hearts very deeply and our memories I will never forget you...