யாழ். கோப்பாய் தெற்கு நாவலடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கிழக்கு, பிரான்ஸ் Léon, ஜேர்மனி Geldern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரேசு கந்தையா அவர்களின் நன்றி நவிலல்.
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!
உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,
மதிப்புக்கள் எல்லாம்
எங்கள் வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும் அப்பா
நாம் இந்த மண்ணில் வாழும் வரை
நம் இதயத் தோட்டத்தில் ஓயாது
பூத்துக் கொண்டிருக்கும்
உங்கள் நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவு நிகழ்வு 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Vernumer Str. 25, 47608 Geldern, Germany எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Our deepest condolences to your family ❤️