2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன்
முன்னாள் கிராம சேவையாளர்(G.S) செட்டிகுளம்
வயது 84
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
இன்ப உணர்வுகளையும்
உம்மால் கண்டு கழித்த
நாட்கள் கடந்து உமை
நினைத்து கண்ணீர் மல்கும்
நாட்கள் வந்ததே
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உங்கள் அன்பு மட்டுமே தந்தையே!
காலங்கள் விரைவாக விடை பெறலாம் - ஆனாலும்
கண்முன்னே தோன்றிடும் உங்கள் நினைவுகள்
எம் உயிர் உள்ளவரை உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் வாழும்
மருமக்கள்(யமுனா, சிவாஜினி)
தகவல்:
மருமக்கள் & குடும்பத்தினர்