1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன்
முன்னாள் கிராம சேவையாளர்(G.S) செட்டிகுளம்
வயது 84
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேற்பிள்ளை பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் சின்ன மாமா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில் வாழும்
மருமக்கள்(யமுனா, சிவாஜினி)
தகவல்:
மருமக்கள்