3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 JAN 1952
மறைவு 28 JUN 2019
அமரர் கதிரவேலு வயிரவப்பிள்ளை
வயது 67
அமரர் கதிரவேலு வயிரவப்பிள்ளை 1952 - 2019 கீரிமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கீரிமலை கூவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மேற்கு அம்மன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு வயிரவப்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு தெய்வமே! மூன்று
 ஆண்டு கடந்தும் ஓயவில்லை
 உம் உயிருள்ள நினைவுகள்
அன்பாய் கதைக் கூறி அழுத்தமாய்
 அரவணைத்து அனுபவத்தை
 அறிவுரையாக்கி எமது
வாழ்வின் வழிகாட்டியானீர்!

குருதியை வியர்வையாக்கி
 கடமையை போர்வையாக்கி
 விழுதாயிருந்து கழுகாய் காத்தீரே!

சொல்லாமல் பிரிந்ததேனோ
 திரும்ப முடியாப் பாதையிலே!
 நெடுவழிப் பயணம் செய்த
 நீர் பயணிக்க முடியவில்லையென
 பாதியிலேயே சென்றுவிட்டீரோ!

இம் மண்ணை விட்டு இல்லை
 பயணம் முடிவுப்பெற்றதென
 சென்று விட்டீரோ விண்ணிற்கு
 கண்களில் நீர் சூழ கலங்கி
 நிற்கின்றோம் உம்
நிழற்படம் முன்னே...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
 பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 29 Jun, 2019