

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்ஷன் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் உங்கள் நினைவில்
மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்...