யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சிறீகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கணவனே கண்கண்ட தெய்வம் என்பது
எவ்வளவு உண்மையானது
என்பதை உணர்த்திச் சென்றீர்களே!
நீங்கள் இல்லாது தனிமரமாய்
கலங்கி நிற்கின்றேன்!
சகோதர பாசம் என்பதற்கு
இலக்கணமாய் வாழ்ந்தீர்களே!
உள்ளன்போடு உறவுகளுடன்
உறவுகொண்டாடி மகிழ்ந்தீர்களே!
உங்கள் பிரிவால் நாமனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்.
சமயநெறி சற்றேனும் வழுவாது
சமூகநலனோடு செயற்பட்டீர்களே!
உங்கள் மனைவி, உங்கள் உறவுகள்,
உங்கள் வீடு என ஒடுங்காது அன்பால்
அனைவரையும் அரவணைத்தீர்களே!!!
நீங்கள் இல்லாத வெறுமை எம்
நெஞ்சில் சுமையாக கனக்கிறது.
எம்மையெல்லாம் தவிக்கவிட்டு
நீங்கள் எங்கும் செல்லவில்லை
எங்கள் மனங்களில் என்றென்றும் நீக்கமற
வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்.
தங்களது ஆத்மா சாந்தியடைய நீலிப்பந்தனை
துர்க்கை அம்பாளைப் பிரார்த்திக்கின்றோம்.