
-
18 MAY 1953 - 24 MAR 2020 (66 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சித்தன்கேணி, Sri Lanka காரைநகர், Sri Lanka
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சித்தன்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிறீகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது குடும்பத்தின் அன்பும் பாசமும் மிக்க உறுப்பினரான கதிரவேலு சிறீகரன் அவர்கள் மறைந்து 31வது நாள் நினைவுகூறப்படும் இத்தருணத்தில் அன்னாரது இழப்பினால் எமது குடும்பத்தில் ஏற்பட்ட ஆற்றொணாத் துயரத்தில் பங்கு கொண்ட அனைத்து நல்லுள்ளங்களிற்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையில் இத்துயர நிகழ்வு ஏற்பட்டிருந்த போதிலும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட அனைத்துக் கருமங்களிலும் கலந்து கொண்டதுடன் முன்னின்று உதவியவர்கள், மறைவுச்செய்தி அறிந்து இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலிருந்தும் பலவகையிலும் எம்மோடு தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்து ஆறுதலளித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் அனுதாபம் தெரிவித்து பதிவிட்டவர்கள் என அனைத்துச் சொந்தங்களிற்கும், நட்பு உள்ளங்களிற்கும் மறைவு குறித்த அறிவித்தலைப் பிரசுரித்து உதவிய எமதூரின் இணையத்தள சேவைகளிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் நினைவுகளுடன் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் மனைவி, சகோதரன், சகோதரி, மைத்துனர், மைத்துனிகள், மருமக்கள்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
