யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg Wasen im Emmental ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சஷ்டி திதி: 16-11-2026
ஓராண்டு ஓடிவிட்டது, உங்களைப் பிரிந்து வாழ்ந்து,
உங்கள் நினைவுகள் மட்டும் எங்களோடு நிழலாய் தொடர்ந்து!
மனைவியின் மனதில் மறையாத காவியமாய்,
பிள்ளைகளின் இதயத்தில் வாழும் பாசமாய்!
குடும்பத்தின் மகிழ்ச்சியாய் இருந்தவரே,
எங்கள் வாழ்வின் நம்பிக்கையாய் திகழ்ந்தவரே!
உங்கள் அன்பான அரவணைப்பைத் தேடுகின்றோம்,
உங்கள் குரல் கேட்காமல் தினமும் வாடுகின்றோம்!
பிள்ளைகள் வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு தருணமும்,
உங்கள் முகம் தேடுகிறது எங்கள் ஒவ்வொரு மனமும்!
காலம் உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும்,
உங்கள் நினைவுகள் எங்களை விட்டுப் பிரியாது!
என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்,
எங்கள் உயிர் உள்ளவரை நினைவில் நிற்பீர்கள்!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
அன்னாரின் ஓராண்டு சஷ்டி திதி கிரியை நிகழ்வுகள் 16-11-2026 திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் அன்று அவரது இல்லத்திலும் (Emmentalstrasse 144 3414 Oberburg) நடைபெற்று,
அதனைத்தொடரந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும், மதியபோசன நிகழ்வும் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் Aula RüegsauschachenAlte Rüegsaustrasse 13, 3415 Rüegsauschachen எனும் முகவரியில் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(இவ்வறிவத்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்)