நெடுந்தீவன்னை தந்த நிர்மலனே!! நெஞ்சார நட்புடனே பழகுகின்ற அன்பு நண்பா!! உன்னையும் இழந்தோம் இன்று! பாசத்தின் உறைவிடமாய், பண்பிற்கு இலக்கணமாய்,திகழ்ந்தாய் எங்கு கண்டாலும் “மச்சி”என்று மகிழ்வாய் எம்மண்ணின் கதைபேசி உன்னைப் போல் உறவாட இனி எமக்கு யாருண்டு? அன்னைக் குணம் கொண்ட அற்புதனே -உனை எங்கினிமேல் காண்போம் ? எவர் உனைப்போல் புன்னகைப்பார்? உன்னை இழந்துதவிக்கும் உன் அருந்துணைவியார் ரதி, உன் அருமை மகள் குகன்யா மற்றும் உறவுகட்கு எந்த ஆறுதல்வார்தையைக் கொண்டு நம்மால் தேற்றிட முடியும்? நட்பென்னும் உணர்வால் எம் உதிரமெங்கும் ஊறிய உனக்கு மரணம் என்றுமில்லை நண்பனே!! எங்கள் மனதினில் என்றும் மறையாத நெடுந்தீவுச் சூரியனாக நின்று ஒளிர்வாய் தோழனே ! அன்பு நிர்மலா! உனக்கு எம் ஆத்மார்த்த அஞ்சலி !! -நண்பன் மா.சித்திவினாயகம்-