Clicky

மண்ணில் 12 OCT 1941
விண்ணில் 05 OCT 2020
அமரர் கதிரவேலு முத்தையா
முன்னாள் வியாபாரி- சுழிபுரம்
வயது 78
அமரர் கதிரவேலு முத்தையா 1941 - 2020 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தங்க. முகுந்தன் குருஸ்வாமி சபரி ஸ்ரீ ஐயப்பன் யாத்திரைக்குழு மூளாய். 07 OCT 2020 Sri Lanka

காலத்தால் காவியமாகிவிட்ட தெய்வீக மைந்தன் அமரர் உயர்திரு. கதிரவேலு முத்தையா ஐயா அவர்களுக்கு காலத்தால் அழியாத அஞ்சலிகள்!!! ........ எத்தனை மூத்தவர்கள் எமைவிட்டுப் போயினர் முத்தையா ஐயா நீங்களுமா போனீர்கள்? மெத்த உயர் பகத்யோடு மேதினியில் வலம்வந்து முத்தியினைப் பெறுவதற்கோ மூச்செடுக்க மறந்தீர்கள் தெத்தித் தெத்தியேனும் சபரிமலைப்படியேறி சாஸ்தாவை வணங்கிடுமோர் பக்தனாய் மிளிர்ந்திட்டு சுத்திநிற்கும் எமையெல்லாம் துயர்மேகம் கௌவிடநீர் நித்திய சுகம்பெறலோ நீத்தாருள் கலந்திட்டீர்? ..... ஓம் சாந்தி சாந்தி சாந்தி -------- கவி ஆக்கம் - மூளாயூர் ஆசுகவி செ.சிவசுப்பிரமணியம் (சமாதான நீதவான்)