Clicky

25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 14 MAY 1915
விண்ணில் 24 JUN 2001
அமரர் கதிரவேலு ஏரம்பு 1915 - 2001 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு ஏரம்பு அவர்களின் 25ம் ஆண்டும் மனைவி ஏரம்பு செல்லம்மாவின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி. 

தந்தையே (அப்பு),

நீங்கள் இயற்கையோடு கலந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஆனால், எங்களுக்காக நீங்கள் பட்ட துன்பங்களும்
தியாகங்களும் சொல்லில் அடங்காதவை. அவற்றை நினைத்துப்
பார்க்கும் ஒவ்வொரு கணமும் எங்கள் இதயம் கனத்துப் போகிறது.

ஆசைக்கு ஒரே ஆண் குழந்தையாகப் பிறந்து, வளர்ந்து,
வாழ்க்கையின் இறுதிவரை குடும்பத்திற்காகப் போராடிப்
போராடி உழைத்தீர்கள். இறுதியில், பட்ட துன்பங்கள் போதும்
என்று படைத்தவன் உங்களைத் தன்னிடமே அழைத்துக்
கொண்டான். நீங்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் நெடுந்தூரம்
சென்றுவிட்டீர்கள்.

நாம் உண்ணும் போதும், உறங்கும் போதும் உங்கள் மடியைத்
 தேடுகின்றோம், தந்தையே (அப்பு). எங்கு செல்வோம்?
யாரிடம் கேட்போம்? அனாதைகளாய் அலைகின்றோம்.
 உங்கள் பாசத்தை யாரிடம் கேட்போம்? கேட்டால் கிடைக்குமா? இல்லை,
ஒருபோதும் கிடைக்காது.

எமது பாசத்தின் பரிவிடமே, எங்கள் தந்தையே (அப்பு),
இனி உங்களை எங்கு காண்போம்? கனவிலாவது வந்து சென்றால்,
நாங்கள் கோடி புண்ணியம் செய்தவர்களாய் நிம்மதிப்
பெருமூச்சு விடுவோம் அந்த நொடியிலாவது.

தந்தையே (அப்பு), என்றென்றும் பாசம், நேசம், பணிவு,
கடமையுணர்வு மற்றும் இறைநம்பிக்கையுடன் நீங்கள் காட்டிய
வழியிலேயே வாழ்வோம்.

அம்மா...

நீங்காத நினைவுகள் தந்து நீண்ட தூரம் சென்று
 ஆண்டுகள் 12 கடந்தாலும் ஓயவில்லை
உங்களின் நினைவுகள் அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!

உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த அரவணைப்பும்
 எங்களை ஒவ்வொரு பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா!

உங்கள் ஆத்மா இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து!
சாந்தியடைய என்றும், இன்றும்,
என்றும் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நினைவஞ்சலி Wed, 24 Jun, 2020