யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரர் மயில்வாகனம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தோடு அமரர் கதிரர் மயில்வாகனம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 18.07.2023 செவ்வாய்க்கிழமை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் எதிர்வரும் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 12 மணிக்கு அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருக்கின்றது. அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கெடுத்து எமக்கு ஆறுதல் தெரிவித்த அன்புஉறவுகளை அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.