யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரர் மயில்வாகனம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவே எமையழவிட்டு
ஆறிடுமோ எம் துயரம் எமை விட்டு
மாண்டவர் மீண்டதில்லை இது மானிட நியதி
ஆனாலும் ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர் அப்பா!
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம்
காணாமல் கேளாமல் கலங்குகின்றோம் நாம் தினமும்
காத்திருக்கும் உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒருமுறை அப்பா..!!
காலங்கள் விடை பெறலாம்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம் அப்பா...!!!
பிரிவால் நினைவுக்கூரும்
உம் குடும்பத்தினர்.
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 08-07-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.