Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 20 SEP 1958
இறப்பு 14 FEB 2026
திரு கதிரமலை சண்முகராசா
வயது 67
திரு கதிரமலை சண்முகராசா 1958 - 2026 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை சண்முகராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
 முப்பதொரு நாட்கள் உருண்டோடி
விட்டதே நம்ப முடியவில்லை
நாளும் தெரியவில்லை

உங்கள் இனிய அன்பான
கதைகள் எம் காதுகளில்
 ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம் அன்பான
 பார்வை கொண்ட தோற்றம் எம்
கண்களில் தெரிகின்றதே எங்களிடமிருந்து

உங்கள் உயிரைப் பறித்த விதியை
என்னென்று சொல்வது தெய்வமே
 உங்களை நினைக்காத நாளுமில்லை
 கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை தெய்வமே

நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள்
அப்பா நீங்கள் மறையவில்லை
என்றென்றும் எங்களுடன் வாழ்கின்றீர்கள்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 14-03-2026 சனிக்கிழமை அன்று மு.ப கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்று வீட்டுக்கிருத்திய கிரிகைகள் 16-03-2026 திங்கட்க்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறும் அத்தருணம் தாங்களும் குடும்ப சகிதம் வருகை தந்து அவரது ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
வல்லை,
அச்சுவேலி வடக்கு.


இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute