1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி மயில்வாகனம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திதி: 01-03-2022
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எங்கள் அன்புத் தெய்வம்
ஐயா நீங்கள்...!
ஓர் ஆண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும்
உங்கள் நினைவுகள் கல்மேல் பொறித்த
எழுத்துக்கள் போல் எங்களை விட்டு அகலவில்லை.
ஐயா எங்கள் இன்ப துன்பங்களை நீங்கள் எம்
அருகிலிருந்து பங்கெடுத்துக்கொள்வதை நாம்
உணருகின்றோம் நீங்கள் இல்லையெனும்
நினைவே நெஞ்சுருக்கிக் கொல்லுதய்யா
நீங்கள் இறந்தாலும் என்றென்றும்
எங்களுக்கு இறைவன் நீங்கள் தான்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
இதயநிறை இரங்கல்களோடு நட்புடன் சாந்தகுமார் வசந்தி