Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 DEC 1928
இறப்பு 12 MAR 2021
அமரர் காசித்தம்பி மயில்வாகனம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 92
அமரர் காசித்தம்பி மயில்வாகனம் 1928 - 2021 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி மயில்வாகனம் அவர்கள் 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

குகநேசன்(கனடா), கோமளா(கனடா), மோகனா(கனடா), ஜெயரூபி(ஆசிரியை- கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம்), ஜீவநேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசம்மா, கனகலிங்க, மகாலிங்கம், வன்னியசிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தங்கராசா, ஞானாம்பிகை, செல்வநாயகி, யோகம், சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராகவன்(கனடா), இரமேஸ்(கனடா), பாஸ்கரன்(முகாமையாளர்- இலங்கை), மதி(கனடா), சிவப்பிரியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபிறாஜ்(கனடா), மதிலா(கனடா), இரகாணன்(கனடா), இரபீனன்(கனடா), கேசவி(வேம்படி மகளீர் கல்லூரி மாணவி), அட்சயன்(சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன்), டின்சிகா(பிரான்ஸ்), யனுசன்(கனடா), பிரணவி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 10 Apr, 2021