

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி (பெருங்குளம் சந்தி), கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்
ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!
பிள்ளைகள் சேர்ந்து நிற்க!
உற்ற உறவும் உறைந்து நிற்க
எங்கள் மறந்து எங்கே போனாய்?
கண்ணில் அழுகை ஓயவில்லை எங்கள்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உன்னை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே !
காலங்கள் போகலாம், காயங்கள் மாறலாம்,
நெஞ்சினில் உள்ள உங்கள் நினைவுகள்
என்றும் எங்களை விட்டு போகாது
உங்கள் நினைவுகளை காலமெல்லாம்
நாங்கள் சுமந்து நிற்போம்..!
Our deepest condolences to you and your family. This is big loss for your family and we extended our deepest sympathy during this difficult time.