யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி (பெருங்குளம் சந்தி), கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட காசித்தம்பி கந்தவனம் பேரம்பலம் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசித்தம்பி, பசுபதி தம்பதிகளின் மூத்த மகனும், செல்லையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சவுந்தரராஜன்(பிரித்தானியா), சவுந்தரகுமார்(கனடா), சவுந்தராதேவி(கனடா), சவுந்தரநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்பரன், பாமினி, காலஞ்சென்ற சாந்தி, யோகேஸ்வரி ஆகியோரின் மாமனாரும்,
குமாரசாமி, நாகம்மா, சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
பாக்கியம், ஞானசுந்தரம், சுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
சுஜன் - உமா, ஐங்கரன் - டிலானி, செந்தூரன் - அடலின், சித்திரா - அருணன், அபிராமி - நிருஷன், ஜனனி, அருண், ரேவதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
டிவினா, அக்ஷயா, அரியானா, அர்னவ், வேலவன், ரியானா, ஈதன், கதிரவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
அரசி, கண்ணன், சுபா ஆகியோரின் பெரியப்பாவும்,
மோகன், குகன், ரமணன், வத்சலா, சகிலா, செந்தூரன், அகிலன், அர்ச்சுனா, அட்சயன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முற்றுப்பெற்ற ஒரு நேர்மையின் பயணம்
ஆரம்பகாலம் ஆவரங்காலில், அன்புக்கு அடிமையான தாயின் பாசம்.
உடன்பிறந்த மூவர் இவரின் கீழ், ஆனால் மூத்தவர்முன் மூவரும் பிள்ளைகள்.
தலைநகரில் வேலை, ஆனால் நினைவலைகளெல்லாம் வீட்டில்.
மனதுக்கு பிடித்து தன் மக்களுக்கு சேவைசெய்ய, கிராம சேவையாளராக ஊரில் வேலை.
நாட்கள் மாதங்களாக, வருடங்கள் கடந்தன.
ஆயுத போராட்டத்தின் ஆரம்ப காலம், யாழ் மண் அவர்களின் கையில்.
அரச சேவைகள் அற்று போக, சமூக பிரச்சனைகள் தலைதூக்கின.
இதற்காக அவர்களின் தெரிவு, இணக்கசபை அதற்க்கு மேல் ஒரு மேல்சபை.
நேர்மையின் பரிசு, அவர்களின் மேற்சபையின் தலைவர்களில் ஒருவர்.
சேவையை தொடர வாய்ப்பும் கிடைத்தது, ஊர் மக்களின் மனதில் இடமும் கிடைத்தது.
நாட்டு பிரச்னை மோசமாக, பிள்ளைகளின் அழைப்பில் கனடா நாட்டில்.
பிள்ளைகளின் அன்பு, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் அரவணைப்பு, உறவினரின் பாசம், தொடர்ந்தது வாழ்கை.
வயதின்மூப்பு, நினைவுகளின் மறதி, கொரோனாவின் கொடுமை இத்தனையும் கடந்து இறுதியாக இயற்கையின் கையில் ஆம் இறைவனின் பிடியில்.
நிகழ்வுகள்
- Saturday, 04 May 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 06 May 2024 9:00 AM - 10:00 AM
- Monday, 06 May 2024 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family. This is big loss for your family and we extended our deepest sympathy during this difficult time.