யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட கஸ்பாறு சவரிமுத்து அவர்களின் நன்றி நவிலல்.
அமரர்களான கஸ்பாறு லூவிசாவின் அன்பு மகனும் செல்லத்துரை, அப்லொனியாவின் அன்பு மருமகனும், விக்டோரியாவின் அன்புக்கணவருமான புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட கஸ்பாறு சவிரிமுத்து ( கடந்த 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று) இறைவனடி சேர்ந்தார் எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவு செய்தியை கேட்டு கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், ஆறுதல், தேறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் பல வழிகளிலும் உதவி செய்தவர்களுக்கும், எமது இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அன்பு மனைவி விக்டோரியா சவரிமுத்து, அன்பு பிள்ளைகளான குணசீலன்(கனடா) - (முன்னாள் யா/பு/ந/ப/நோ/கூ/ச பொது முகாமையாளர்), ஜெயசீலன்(கனடா), சாமினி(கொழும்பு), விஜயசீலன்(கனடா), சர்மிளா(கனடா), எலன்மேரி(கிளிநொச்சி), அன்பு மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.