யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் வசிப்பிடமாகவும் கொண்ட கஸ்பாறு சவரிமுத்து அவர்கள் 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டவருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கஸ்பாறு லூயிஸ்சா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை அப்புலோனியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்ரோறியா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
குணசீலன்(கனடா), ஜெயசீலன்(கனடா), சாமினி, விஜயசீலன்(கனடா), சர்மிளா, கெலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜுலியட், டெய்சி, நிமால், நந்தகுமார், விமல், கோகிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகா, ஜேசன், நிலுசா, ஜோய், வினோ, விதுசா, அன்றசன், ஜேதன், டெனிஸ், கம்சிகா, கின்சன், டினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 23-12-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 02:30 மணிக்கு புனித பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.