யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேயன் நாராயணன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி ....
இறைபதமடைந்த(14.01.2023) எங்கள் மகன் செல்வன்.
நாராயணன் கார்த்திகேயனின் மூன்றாம் வருட
ஞாபகார்த்த தினம் ஜனவரி மாதம் பதினான்காம் திகதியாகும்(14.01.2026).
காரைநகரில்; 04.07.1976 பிறந்து,
கொழும்பில் தனது உயர் கல்வி கற்று,
அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பு பயின்று
கனடாவில் விமான தொழில்நுட்ப உத்தியோக பதவி வகித்து,
மனைவி, பிள்ளைகளுடன் சந்தோஷமாக
குடும்ப வாழ்வு வாழ்ந்த காலம்,
கொரோனா என்ற கொள்ளைநோய் தாக்கத்தால் வந்த
நோயினால் எங்களை பிரிந்த மகனின் நினைவுகளை
உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
திருச்சிற்றம்பலம்
நாக்கு கத்தியைக் காட்டிலும் ஆழமாகப் பாயும்
உத்தமனுக்கு எதனாலும் கேடில்லை.
நிலையற்றதாகிய பொருளைக்கொண்டு
நிலையுற்றதாகிய அருளை அடைவதே அறிவுடைமை.
நிலையற்றதாகிய உடம்பினைக் கொண்டு
நிலையுற்றதாகி முத்தியை அடைவதே அறிவுடைமை.
அன்பு, அறம். அருள், ஈகை(கொடை) இவற்றை விட்டுவிட்டு
பொருளற்ற சடங்குகளில் ஈடுபடுவது ஆரவாரமே ஆகும்.
வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் தூய்மை அடைவதே
சமயத்தின் முதற்படியாகும்.
தீய குணங்கள் விலகுவதும் நற்குணங்கள் அமையப்
பெறுவதும் தாம் இறைவழிபாட்டின் நோக்கமாகும்.
நல்ல நினைவும் நல்ல செயல்களும் பிறவாமையை அளிக்கின்றன
மனிதனுடைய தீய எண்ணங்களே பிறவிக்கு விதையாக அமைகின்றன.
மனிதன் வேண்டுவதையெல்லாம் இறைவர் அளிப்பதில்லை
அவனுக்கு இப்பிறவியல் உரியதை (வினைக்கு ஏற்ப) அளிக்கிறார்.
Let me explain what I mean by religion.
It is not the Hindu religion…. but the
religion which transcends Hinduism,
which changes one’s very nature,
which
binds one indissolubly to the truth
within
and whichever purifies.
அன்புடன் ஆத்மசாந்திக்காக பிராத்திக்கும்,
அப்பா, அம்மா, சகோதரர்கள்,
மனைவி பிள்ளைகள்,
மற்றும் குடும்ப உறவுகள்.