Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JUL 1976
இறப்பு 14 JAN 2023
அமரர் கார்த்திகேயன் நாராயணன் (லவன்)
வயது 46
அமரர் கார்த்திகேயன் நாராயணன் 1976 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேயன் நாராயணன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 21-01-2025

தைப்பொங்கல் தினத்தில் இறைவனடி சேர்ந்த லவனுக்கு
எங்கள் இறை அஞ்சலி:

ஆண்டு இரண்டு கடந்தும் இன்றும் உனது ஞாபகமே மகனே!
அன்போடும், ஆசையாகவும்,
அறிவு புகட்டி அணைத்து வாழ்ந்த மகனே!
அம்மா, அப்பாவின் நினைவில் என்றும் நிற்கும்
 உன் ஆறாத்துயரம் இன்னும் ஆறவில்லை மகனே!
ஆண்டு முழுவதும் நினைவிலும்,
 கனவிலும் நலன்கருதி இறைவனை சதாபிரார்தித்தோம் மகனே!
 உண்மையும், நேர்மையும் இருகண்களாக
 மக்களை சந்தோசமாக நேசித்து இன்புற்று வாழ்ந்த மகனே!
 உன் நற்குணங்களில் என்ன தவறு நடந்தது,
 இறைவன் இளமையில் பற்றிக்கொண்டான் மகனே!
 பாசமுள்ள மனைவி, பிள்ளைகளுக்கு பல நன்மைகளையும்,
 நன்றாக நல்வாழ்வும் அமைத்தாய் மகனே!
 பலன்கள் பல செய்து மனைவி, பிள்னளகளின்
வாழ்க்கைச் சிறப்பை பார்க்க
கொடுத்துவைக்கவில்லை மகனே!
 அன்பின் சகோதரர்கள், மைத்திமார்களுடன்
 குதுாகலமாக கொண்டாடிய உன்பரந்த உள்ளம் எங்கே மகனே!
 ஆறாக்கவலையால் மனம் குமுறல்களை
 பகிர்ந்து உரையாட முடியவில்லை மகனே!

 ஓம் சாந்தி!

ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்....

உன் பிரிவால் வாடும் அப்பா, அம்மா,
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், 
மைத்துனிமார்கள்

பிறரிடம் குறைகாண்பதை விட்டுவிட வேண்டும்

பிறரிடம் உள்ள நல்லனவற்றைப் பார்க்கப் பழக வேண்டும். பிறரிடம் உள்ள குறைகளைப் பார்க்கும் தகுதி நமக்கில்லை. ஏன்? நாமும் குறையுடையவர் தானே. இறைவர் ஒருவரே குறையில்லாதவர்.

"நன்றுடையானைத் தீயதிலானை" திருநாவுக்கரசர் வாக்கு. குறையுடைய நாம் மற்றவர்களின் குறைகளைக் காண்பதற்கு என்ன தகுதி உள்ளது ? ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப்பற்றி அவதூரான செய்திகளைப் பேசுவதைப் புறங்கூறுதல் என்பார்கள். புறங்கூறுவதால் நம்முடைய வாய் தூய்மையை இழக்கின்றது. நமது புண்ணியமும் தேயும் என்கிறார் திருமூல நாயனார்.

"அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்" - திருமூலநாயனார்
இவற்றை யெல்லாம் விட்டு 'சிவாய நம' எனச் சிந்தித்திருப் போமாக. 

God is invisible, beyond the reach of the
human eye. All that we can do, therefore,
is to try to understand
the words and actions of those
whom we regard
as men of God. 

அறிஞர்களின் ஆன்மீக அறிவுரைகள்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices