Clicky

நினைவஞ்சலி
மண்ணில் 20 MAY 1933
விண்ணில் 01 JAN 2020
அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம்
வயது 86
அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம் 1933 - 2020 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவு கொண்டு
குடும்ப உறவுகள்
வீழ்ந்து விடாதிருக்க
ஆணிவேரென இருந்தாய் நீயே...! 

நலமுடனே வாழ்ந்து வந்தாய்
எல்லோர் மேலும் கருணை காட்டி வந்தாய்...!
எதிர் பாராமல் சட்டென்று இழந்து விட்டோம்
இனி எப்போ காண்போம் ஐயா உன்னை.....!
உமது ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.......

உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

எங்கள் குலவிருட்சம் சாய்ந்த வேளையில் எமது துயர் துடைக்க நேரில் வந்து எமக்கு ஆறுதல் கூறியோர், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர், அஞ்சலி செலுத்தியவர்கள், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டோர், பல உதவிகளை செய்து எமக்கு உறுதுணையாய் நின்றோர் மற்றும் உணவுகளை தந்து உதவிய உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 29-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 31-01-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos