Clicky

பிறப்பு 20 MAY 1946
இறப்பு 25 APR 2020
அமரர் கார்த்திகேசு பரம்சோதி
ஓய்வுபெற்ற இலங்கை மின்சார சபை பொறியியலாளர்
வயது 73
அமரர் கார்த்திகேசு பரம்சோதி 1946 - 2020 அல்வாய் தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பாலராஜன் 25 APR 2020 Canada

எனது பெரியப்பாவின் மகன் கார்த்திகேசு பரஞ்சோதி, 73(அண்ணா)அவர்கள் இன்று கொழும்பில் காலமானர். சிறிய பராயத்தில் இருந்து என்னை வழிப்படுத்தினவர்களில் அவர் முதன்மையானவர் . வியற்னாம், யுத்தம், மைலாய் படுகொலை _ மற்றும் ஏகாதிபத்திய சிந்தனைக்கு எதிரான யதார்தமான பார்வை. பஹn ய் மதம் அதில் மற்ற மதங்களளயும் மதிக்கின்ற தன்மை போன்றவற்றை கற்றுத் தந்தவர். 'அவர் எனக்கு கணிதம் | பெளதீகம் போன்ற பாடங்கள் கற்பித்தார். அண்ணா விளையாட்டுத் துறையில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பல சாதனை புரிந்தவர்/ ஈட்டி எறிதல் javelin குண்டெறிதல் shot put, தட்டெறிதல் discus throw யாழ் மாவட்டத்தில் சாதனைகள் i புரிந்தவர் அவரை "வேடன் " என்றும் சொல்லுவார்கள் துடுப்பாட்டத்தில் வேகப்பந்து வீச்சில் சாதனைகள் புரிவார். Hat Tricks அவரதுபெயரும் படமும் அந்நாளில் Daily news sports section இல் வரும். அதுபோல் உதைபந்தாட்டத்தில் Fullback ஆக விளையாடுவார் அவரைத் தாண்டி பத்து போகாது"பரஞ்சோதி மலை" அவர் மின் பொறியில் துறை கற்று இலங்கையில் லட்சபான Laxapana நீர் மின்னிலையத்தில் பணியாற்றச் சென்ற காலத்தில் பள்ளி விடுமுறைக்கு நீர் மின் உற்பத்தி சாலையை பார்கச் சென்றேன். அப்போது அவர் " நீயும் படித்தால் இப்படி பெரிய ராட்சத சாதனங்களை கட்டுப்படுத்த லாம் என்பார் பிற்காலத்தில் நானும் பொறியல் துறை இலங்கை பெற்றோலிய கூட் டு தாபனம் , மேலும் மத்திய கிழக்கில் . எண்ணை எரிவாயு பொறியியற் துறையில் பணியாற்றக் கூடியதாக இருந்தது. எனது மனதிலே உள்ள சமூகம் சார்ந்த பார்வையின் கண்ணாடி அண்ணா தான். என்னை அண்ணாவின் வால் என்று தான் சொல்வார்கள். திருட்டுத்தனமா படம் பார்க் ப் போவதும், அதுவும் ஆங்கிலப்படம் பார்பதும் அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். சீட்டாட்டம் 304 | Bridge அண்ணாவைப் பற்றிய நினைவுகள் மிகவும் நெருக்கமானவை மனதை நெருடுகின்றன அண்ணாவின் மனைவி, பிள்ளைகள் சகோதரங்கள் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் அதே போல எனது சகோதரங்களையும் இத்துயரம் வாட்டும்