யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், அல்வாய் வதிரியை வதிவிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பரம்சோதி அவர்கள் 25-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு பெறாமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஸ்யந்தி(பிரித்தானியா), காண்டீபன்(கனடா), சோபனா(பிரித்தானியா), ரம்மியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
சிறிசக்திவேல், சுரேந்திரன், பிருந்தாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாங்கி, ரோகித், சாகிஸ், கரிஸ்மா ஆகியோரின் நேசமிகு பேரனும்,
மகேஸ்வரி, செல்வச்சோதி, இராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சோதிமலர், கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலும்மயிலும், சாந்தநாயகி, சுப்ரமணியம், மனோகரன், காலஞ்சென்ற செல்வச்சோதி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கமலநாதன், குகனேஸ்வரி, கமலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We feel sorry for the your lost of your loved one. my deepest sympathies to you and your family. may god bless and comfort you and you family during this difficult time and ease this painful period...