

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்திகேசு கதிரவேல் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி 10-01-2024
ஆண்டுகள் ஐந்து ஆனாலும் அப்பா
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு
அணுவளவேனும் அகலவில்லை
எங்களுக்காக நீங்கள் செய்த
தியாகங்கள் எண்ணிலடங்காது!
மத்துகமவிலும் பின்பு
கொழும்பு நான்காம் குறுக்குதெருவிலும்
உங்களின் ஓயாத கடின உழைப்பினால்
எங்களை சிறப்பாக வளர்த்தெடுத்தீர்கள்
கலட்டி வரசித்தி வினாயகர் தொடக்கம்
கொழும்பு செட்டித்தெரு மாணிக்க பிள்ளையார் வரைக்கும்
பின்பு கனடா நல்லூர் கந்தன் தொடக்கம்
இந்திய திருவெண்ணாமலைவரை
உங்களின் ஆண்மீக பயணத்தினால் அனைவரையும்
அரவணைத்து சென்றீர்கள்!
பாலர் பாடசாலை தொடக்கம்
பல்கலைகழகம் வரை
எங்களை கூட்டிச்சென்றீர்கள்
உங்களுடன் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை
திரும்பி வராதா என எண்ணி துடிக்கின்றோம்,
எம் எஞ்சிய வாழ்க்கையை
உங்களின் வழிகாட்டலுடனும்
உங்களின் நினைவுகளுடனும்
கடந்து செல்கின்றோம்!
உங்களின் ஆத்மசாந்திக்காக
புங்குடுதீவு கலட்டி வரசித்தி வினாயக பெருமானை வேண்டுகின்றோம்!
Periyappa you are always in our thoughts and prayers.