9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கார்த்திகேசு அருளம்பலம்
(அருணாசலம்)
(Marketing Department - Colombo)
வயது 88
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி, ஊரெழு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கார்த்திகேசு அருளம்பலம்(அருணாசலம்) அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள் ஓடிவிட்டது அப்பா !
ஒவ்வொரு நாளும் உங்களோடு தான்
நாமுள்ளோம் உங்கள் நினைவை
எம்முள்ளத்திலிருந்து ஒரு நிமிடம் கூட
ஓட்டிவிட முடியவில்லை அப்பா !
ஊர் உங்களை மறக்கலாம்!
உலகம் உங்களை மறக்கலாம்!
உங்கள் உதிரம் உறவு நாம்,
உங்கள் நினைவு இல்லாமல்
எத்தனை நாள் நாமிருப்போம் அப்பா
இதயத்தாக்கத்தால் ஓருநாள்
நீங்கள் இல்லாது போய்விட்டீர்கள்!
இதனால் இறக்கும் வரை எங்களுக்கு
இதயதாக்கமே இருக்குதையா!!
இருப்பீர் நீங்களென்று இறுமாந்திருந்தோம்!
எம்மை எல்லாம் ஏங்க வைத்து
ஏன் அப்பா இறைவனிடம் சென்றுவிட்டீர்!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்