

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு அரிச்சந்திரா அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(கைசர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகபூசணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி, சிற்றம்பலம், குருசாமி, மார்க்கண்டு, சரஸ்வதி, மகாலட்சுமி, உருத்திரா மற்றும் இந்திராணி(கனடா), ரவீந்திரநாத்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சந்திரகுமாரன்(ஓய்வுநிலை ஆசிரியர்- சுழிபுரம்), சந்திரமோகன்(கனடா), சந்திரகலா(கனடா), சந்திரகாந்தன்(கனடா), சந்திரரூபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சந்திரயோகன், சந்திரிகா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மலர்விழி, கோமதி, ஜெகதீஸ்வரன், சதாயினிமலர், கமலகுமாரி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கோகுலவர்த்தன், வைஷ்ணவி, வர்மன், தர்மினி-நாகரத்தினம், துஷ்யந்தன் -கிருஷ்ணப்பிரியா, ஜயந்தினி, கர்ஷினி, நிசானி, ஹிசான், யோசிக்கா, சந்தோஷ், கிருஷிக்கா, கிருஷ்ஹாந்தன், அஜந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
வெண்ணிலா, சயானன், வேணுஜன், நவிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுழிபுரம் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.