யாழ். குமார் இல்லம், விக்னேஸ்வரா கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு இரவீந்திரநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உயிர் கலந்து வந்தவனே
கருவறையில் தோன்றிய பந்தத்தை அறுத்து
கல்லறையை தேர்ந்தெடுத்தாயோ...
மாதம் ஒன்றாகியும் மாறவில்லை- உன்
மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்!
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுவதும் நீ தானே
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழவேண்டும்
என்றுதானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப்பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தைதான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்....
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி 29-11-2023 புதன்கிழமை அன்று நடைபெற்று அதனைத் தொடர்ந்து 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று Salle Jean- Marie Vianney 30 rue George Clemencenu, 95100 Argenteuil எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் மதியபோசனம் நடைபெறும். இந் நிகழ்வில் தங்கள் குடும்ப சகிதம் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.