5th Year Memorial of Karthigesu Kamalanathan. Karthigesu Kamalanathan was Born in Kondavil, Jaffna, lived in UK. He passed away peacefully on 1st January 2021.
அன்பான அப்பா
உங்கள் முகம் காண ஏங்கித் துடிக்கின்றோம்
எங்களை வழிநடத்தி அறிவூட்டவேண்டிய
நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்
ஐந்து ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் ஆசைமுகம் எங்களை
விட்டு பிரியாது எங்களையும்
அம்மாவையும் யாரிடத்தில்
விட்டுவிட்டு சென்றீர்கள்
அப்பா
பார்க்கும் இடமெல்லாம்
நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா
ஒருதடவை உங்கள் குரலை
காட்டமாட்டீர்களோ அப்பா
நீங்கள் மலையைப் போல உறுதியானவர்
வெயிலிலும் மழையிலும் எங்களுக்கு நிழல் தந்தவர்
உங்கள் பாடங்கள், நதிகளைப் போல
எங்கள் இதயத்தில் ஓடுகின்றன
நீங்கள் இல்லாதபோதும், உங்கள் ஞானம்
எங்கள் பாதையை ஒளிரச் செய்கிறது
ஒரு வெற்றிடம் உள்ளது, அமைதியான, வலிமிகுந்த இடம்
ஆனால் உங்கள் அன்பு எங்கள் நித்திய அருளாகும் அப்பா
எங்களை எல்லாம் ஆறாத்துயரில்
ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொள்ளும்
எம் அப்பாவின்
ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
முக்தி அடையட்டும்.