அன்பைக் காட்டி பண்பை ஊட்டி வையகத்தில் வாழ்ந்து காட்டு என்று என்னை வளர்த்து விட்டு என்னுடன் இணைந்து வாழாமல் சென்று என்னை கலங்க வைத்து விட்டீர்களே அப்பா.. உங்களை நான் இழக்கவில்லை அப்பா உங்களை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்திருக்கிறேன்? நீங்கள் எப்போதும் என்னுடனே இருக்கிறீர்கள் அப்பா?நீங்கள் இல்லாத உலகமே எனக்கு இருட்டி விட்டது அப்பா ? உங்கள் தூக்கம் கலைந்திடாது கண் திறந்து காத்திருக்கிறேன் அப்பா?இறைவனோடு நீங்களும் எப்போதும் வழிநடத்த வேண்டும் அப்பா?கட்டிக் கொள்ள கைகள் ஏங்குது. முத்தம் தந்திட முகமும் அழைக்குது. கண்காணாத தேசத்தில் நான் என்ன செய்வேன் அப்பா? உங்களை இழந்து தவிக்கவில்லை காணாமல் கலங்குகிறேன் தேடித் தேடித் தவிக்கின்றேன் அப்பா அப்பா அப்பா என்று ஆழ்மனது கதறுகிறது ஆறுதலளிக்கு யாரும் இல்லை அப்பா தோளோடு என்னை அணைத்து ஆறுதல் தந்திடுங்கள் அப்பா!!!